அமரன் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மதராஸி’. இந்தப் படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தை அடுத்து அவர் இயக்கும் படம் இது. ‘தி கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் கதை என்று கூறப்படுகிறது.
இதில் கல்யாணி பிரியதர்ஷன், கயாது லோஹர் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’, சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ படங்களில் கல்யாணி ஏற்கெனவே நடித்திருந்தார்.
‘டிராகன்’ மூலம் தமிழில் அறிமுகமான கயாது லோஹர், ‘இதயம் முரளி’, சிம்புவின் 49-வது படம் என நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.