Take a fresh look at your lifestyle.

மோகன்லாலுக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று (மே 21ம் தேதி) தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் அவருக்கு தென்னிந்திய திரை உலகப் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், ‘40 ஆண்டுகளாக பல விமர்சனங்கள் மற்றும் விவேகமான பார்வையாளர்கள் மத்தியில் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பது ஒரு பெரிய சாதனை.

400 படங்கள் இதுவரை நடித்து விட்டீர்கள். இந்த எண்ணிக்கையைப் பார்த்து சிலர் அவநம்பிக்கையாக கூட கூச்சலிடக்கூடும். ஆனால் திரு பிரேம் நசீர் அவர்களின் 500 படங்களின் சாதனையை நீங்கள் முறியடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான `உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

அந்தப் படத்தில் கமல்ஹாசன் ஒரு நெகட்டிவ் கேரக்டரிலும், மோகன்லால் காவல்துறை உயர் அதிகாரி கேரக்டரிலும் நடித்திருப்பார்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோகன்லால் சேட்டா.

– தேஜேஷ்