‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் உருவாகி வரும் 69-வது படத்தை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசிப் படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் இணைய உள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 121 கோடிக்கு பெற்றதாகவும் படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.