Take a fresh look at your lifestyle.

இந்தியன்-2 தாமதமாவது ஏன்?

மக்களவைத் தேர்தல் காரணமாக பெரிய தமிழ்ப் படங்கள் கோடை விடுமுறைக்கு பதிலாக ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான படமான ‘இந்தியன் 2’ மற்றும் தனுஷின் 50வது படமான ‘ராயன்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர்.

ஆனால், இப்போது ‘இந்தியன் 2’ வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என்றும், அதற்கு பதிலாக தனுஷின் ‘ராயன்’ ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என்ற செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ராயன்’ தனுஷின் 50வது படம். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான், எடிட்டிங் பிரசன்னா ஜிகே.

– தேஜேஷ்