Take a fresh look at your lifestyle.

விவாகரத்தை சூசகமாக அறிவித்த ஹன்சிகா!

149

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு நான்கு நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொண்டால், அதில் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. இதற்கு இன்னொரு உதாரணமாக விளங்க ஆயத்தமாகி வருகிறார் நடிகை ஹன்சிகா.

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சேனல்களில் நடித்த ஹன்சிகா, நாயகியாக 16-வது வயதில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அறிமுகமானார். அவரது முதல் ஜோடி அல்லு அர்ஜூன்.

‘தேசமுருடு’ என்ற அந்தத் தெலுங்கு திரைப்படம் 2007-ம் ஆண்டு வெளிவந்தது.

இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானது, பிரபுதேவா இயக்கத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த ‘எங்கேயும் காதல்’.

ஆனால், திரையில் முதலில் வெளியானது தனுஷ் ஜோடியாக நடித்த ‘மாப்பிள்ளை’. 2011-ம் ஆண்டு இந்த இரு சினிமாக்களும் ரிலீஸ்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்த ஹன்சிகாவுக்கு கல்யாண ஆசை வந்தது.

கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்தார். அவர்களது திருமணம் வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை.

ஹன்சிகா, தனது கணவரைப் பிரியவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

ஹன்சிகா, முதலில் தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டெலிட் செய்தார். இந்த நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்

அந்தப் பதிவில், இந்த ஆண்டு எனக்குத் தெரியாமலேயே எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. என்னுள் இருக்கும் எனக்குத் தெரியாத சக்தியை உணர்த்தியது. மனம் நிறைந்து, அமைதியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் ஹன்சிகாவின் விவாகரத்து விவகாரம் உறுதியாகியுள்ளதாக சினிமா உலகில் பல தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி