வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஒவ்வொரு முறையும் சுவையான உணவு வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது ‘கீதம் வெஜ்’ உணவகம்.
இதன் 11வது கிளைத் திறப்பு விழாவில் நடிகை நளினி, நடிகர் YG மகேந்திரன், ஆர்த்தி மற்றும் கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவில் பேசிய அதன் நிர்வாகத்தினர், “நல்ல வெஜ் உணவு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது நம்முடைய ‘கீதம் வெஜ்’. நீங்கள் எந்த நேரத்தில் பசி என்று சாப்பிட வந்தாலும் சுடச்சுட இங்கு உங்களுக்குப் பிடித்த வெஜ் உணவு கிடைக்கும்.
காலை 6 மணியில் இருந்து இரவு 2 மணி வரை ‘கீதம் வெஜ்’ திறந்திருக்கும். உணவின் சுவை இங்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் ‘கீதம் வெஜ்’ சிறப்பானது, நம்பகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றது. வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன உணவு அனுபவத்தை வழங்க காத்திருக்கிறது” என்கின்றனர்.