உங்களை இயக்குவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என ராயன் திரைப்படத்தில் இணைந்துள்ள இயக்குநர் செல்வராகவன் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50-வது படத்திற்கு ராயன் என பெயரிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ராயன்’ படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவைத் தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதளத்தில், உங்களை இயக்குவேன் என ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை என இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
– தேஜேஷ்