Take a fresh look at your lifestyle.

பிரபாசுடன் நடிக்க ரூ. 20 கோடி சம்பளம் கேட்ட தீபிகா!

‘அனிமல்’ படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் ‘ஸ்பிரிட்’.

இந்தப் படத்துக்கு முன்னதாக, ‘ஃபாஜி’ மற்றும் ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களை முழுமையாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் பிரபாஸ்.

‘ஸ்பிரிட்’ படத்துக்காக தனது உடலமைப்பை மாற்ற முடிவு செய்திருக்கிறார், அவர். இதற்காக 2 மாதங்கள் முழுமையாக டயட், உடற்பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்.

டூப் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என பிரபாஸிடம் சந்தீப் ரெட்டி வாங்கா சொல்லி இருப்பதால், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்தார் பிரபாஸ்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன், ‘ஸ்பிரிட்’ படத்தில், பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார். இதில், கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பாளர் ஓகே சொல்லி விட்டார்.

தீபிகா இருந்தால், படம் சர்வதேசச் சந்தையில் நல்ல விலைக்குப் போகும் என்பது அவரது கணக்கு. தனது திரை வாழ்க்கையில் தீபிகா படுகோன் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது இதுவே முதன்முறை.

– பாப்பாங்குளம் பாரதி.