Take a fresh look at your lifestyle.

வைரலாகும் ‘டியர் ஸ்டூடண்ட்’ பூஜை புகைப்படம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே மாதவனுடன் `தி டெஸ்ட்’ மற்றும் யோகி பாபு உடன் `மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி உடன் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இந்தப் படத்துக்கு `டியர் ஸ்டூடண்ட்’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இதுகுறித்த புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஏற்கனவே நிவின் பாலி உடன் `லவ் ஆக்சன் ராமா ’என்ற படத்தில் நடிகை நயன்தாரா நடித்த நிலையில் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் படம் தான் ‘டியர் ஸ்டூடண்ட்’. இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஆசிரியை கேரக்டரில் நயன்தாரா நடிப்பதாக கூறப்படும் இந்தப் படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

– தேஜேஷ்