Take a fresh look at your lifestyle.

‘தக்லைஃப்’ காட்சிகள்: விமர்சனங்களை எதிர்கொள்ளும் படக்குழு!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அண்மையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. தாதாவாக கமல்ஹாசன், குட்டி தாதாவாக சிம்பு இருவரும் நடித்துள்ளனர்.

கமல்ஹாசனின் கெட்டப்பும், வசன உச்சரிப்பும் கவனம் ஈர்க்க, இன்னொரு பக்கம் சிம்புவின் ஆக்ஷனில் அனல் பறக்கிறது.

இடையிடையே ரொமான்ஸ் காட்சிகள் உள்ளன. அது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. டிரெய்லரில் கமல் – அபிராமியின் படுக்கையறைக்காட்சி இடம் பெற்றுள்ளது.

இருவரும் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் காட்சி, சர்ச்சையாகி உள்ளது.

கமலைவிட அபிராமி 30 வயது இளையவர். ‘இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் தேவை இல்லாதது’ என வலைத்தளங்களில் ஒரு தரப்பு போர்க்கொடி உயர்த்த – இன்னொரு தரப்பு இந்தக் காட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

‘இது கற்பனை கலந்த சினிமா. வயதை எல்லாம் பார்க்க வேண்டாம்’ என பெட்ரூம் காட்சிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் கமல் ரசிகர்கள். இந்தக் காட்சியால் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்து விட்டது.

கமல் – திரிஷா தொடர்பான இன்னொரு பெட்ரூம் காட்சியும் உண்டு. அதனை யாரும் விமர்சிக்கவில்லை.

– பாப்பாங்குளம் பாரதி.