Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவில் ராஜ்கிரணின் ராஜாங்கம்!

தமிழில் கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண் பல முன்னணித் திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திரு்பவர். 

90-களில் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கியவராக இருந்த ராஜ்கிரண், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்திலும் பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ள சிறந்த 10 கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் தொகுப்பு இது.

என் ராசாவின் மனசிலே 

இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண், மீனா, ஸ்ரீவித்யா என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை நடிகர் ராஜ்கிரண் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

நந்தா 

2001-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா, கருணாஸ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பாண்டவர் பூமி 

சேரன் இயக்கத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், விஜய குமார் நடித்துள்ள குடும்பத் திரைப்படம். சுஜாதா ரங்கராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

கோவில்

இயக்குநர் ஹரி இயக்கத்தில், தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரிப்பில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு நடித்திருக்கும் அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையமைத்துள்ளார்.

சண்டக்கோழி

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா கிருஷ்ணன், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம்.

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தவமாய் தவமிருந்து 

இயக்குனர் சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண், செந்தில், சேரன் நடித்துள்ள குடும்பப் படம். ஷண்முகம் தயாரிக்க, இசையமைப்பாளர் சபேஷ் முரளி இசையமைத்துள்ளார்.

முனி 

2007-ம் ஆண்டு வெளிவந்த திகில் கலந்த நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை ராகவா லாரன்ஸ் தானே இயக்கி நடித்துள்ளார்.

இவருடன் வேதிகா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

மஞ்சப்பை

2014-ம் ஆண்டு ஜூன் 6-ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை என் ராகவன் இயக்க, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்க, விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க, கிப்ரான் இசையமைத்துள்ளார்.

கொம்பன் 
தமிழ்த் திரையுலகின் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகனாக கார்த்தி மற்றும் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க எம் முத்தையா இப்படத்தை இயக்க ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ப.பாண்டி 

நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பான வொண்டர் பிலிம்ஸ் மூலம் தானே இயக்கி தயாரித்து நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம்.

இப்படத்தில், ராஜ்கிரண், நதியா, பிரசன்னா, சாயா சிங், ரேவதி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

  • நன்றி : ஃபிலிம் பீட் இதழ்