Take a fresh look at your lifestyle.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ‘பேபி ஜான்’!

அட்லீயின் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பேபி ஜான்’. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதையின் நாயகனான வருண் தவானின் ஆக்ஷன் அவதாரம் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஏற்கனவே இந்தத் திரைப்படம் கடந்த மே மாதம் 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனாதால் பட வெளியிட்டுத் தேதி தள்ளிப்போனது.

இந்த நிலையில் ‘பேபி ஜான்’ திரைப்படம் அடுத்த மாதம் கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.