Take a fresh look at your lifestyle.

என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம்!

- வணங்கான் குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தொழில்நுட்பப் பணிகளும் தொடங்கப்பட்டு இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சியான ஒரு பதிவையும் குறிப்பிட்டுள்ளார்.

“பாலா சாருடன் பணியாற்றியது எனக்கு ஒரு மிகப்பெரிய மரியாதை மற்றும் அதிர்ஷ்டம். உண்மையில் அவரது இயக்கத்தில் நடித்தது ஒரு விலைமதிப்பு இல்லாத அனுபவம்.

என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு படத்தில் அவர் கொடுத்த ஒரு அசாதாரமான கேரக்டரை முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமுத்திரக்கனி, மிஷ்கின், ஜி.வி. பிரகாஷ், ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்போது பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.

– தேஜேஷ்