சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால் மதிப்புமிக்க பத்ம விபூஷண் விருது பெற்ற மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அந்தஸ்து இன்னும் வலுவாக வளர்ந்துள்ளது. பல நடிகைகள் அவருடன் பணிபுரிய தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
‘ஆபத்பாந்தவுடு’ மற்றும் ‘ஆஜ் கா கூடராஜ்’ ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களில் சிரஞ்சீவியுடன் நடித்த பாலிவுட் நடிகை மீனாட்சி சேஷாத்ரி, சமீபத்தில் அவருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பேசினார்.
“சிரஞ்சீவியுடன் நான் இரண்டு படங்களில் பணிபுரிந்தேன். தெலுங்கில் ஆபத்பாந்தவுடு மற்றும் இந்தியில் ஆஜ் கா கூடராஜ். அவர் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றுவது எனது அதிர்ஷ்டம்” என்று கூறினார்.
1992 இல் கே. விஸ்வநாத் இயக்கிய, ‘ஆபத்பாந்தவுடு’ ஐந்து மாநில நந்தி விருதுகள் மற்றும் சிரஞ்சீவிக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதையும் பாராட்டுகளையும் பெற்றது.
‘ஆஜ் கா கூடராஜ்,’ சிரஞ்சீவியின் இரண்டாவது பாலிவுட் திரைப்படம் மற்றும் அவரது தெலுங்கில் வெற்றிப் பெற்ற கேங் லீடர் படத்தின் ரீமேக் ஆகும்.
சிரஞ்சீவியை மீனாட்சி சேஷாத்ரி பாராட்டியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
– தேஜேஷ்
#மெகா_ஸ்டார்_சிரஞ்சீவி #Meha_Star_Chiranjeevi #பாலிவுட்_நடிகை_மீனாட்சி_சேஷாத்ரி #Bollywood_Actress_Meenakshi _eshadri #கே. விஸ்வநாத் #K Vishwanath #ஆபத்பாந்தவுடு #Aapadbandhavudu #ஆஜ்_கா_கூடராஜ் #Haj_ka_Kootaraj