தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் பத்ரி. இந்தப் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பார்.
அதைத் தொடர்ந்து ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல் உட்பட இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ்ப் படங்கள் குறைவு தான். ஆனாலும் இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த பூமிகா. தற்போது 7 வருடத்திற்கு பின்பு மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார்.
தற்போது இவர், ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தில் ஜெயம் ரவியின் சகோதரியாக நடித்துள்ளார்.
இந்தப் பட நிகழ்ச்சியில் பேசிய பூமிகா, “நீ எவ்வளவு வெற்றியடைந்தாலும் வீட்டிற்கு திரும்பும்போது வீட்டில் உன்னுடைய குழந்தைகள் சகோதரர்கள், உறவினர்கள் இருப்பார்கள். அவர்களைவிட மிகப் பெரிய சந்தோசம் எதுவும் கிடையாது. அதேபோல் தான் நானும், எனது சகோதரனுடன் தினமும் பேசுவேன்.
ஜெயம் ரவி இந்தப் படத்தில் எனது சகோதரனாக நடித்திருக்கிறார். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் பணிவான மனிதராக உள்ளார்.
நான் தமிழில் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு படத்திலும் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என பட நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பூமிகா.