இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தில் ராஜா’.
செப்டம்பர் 27-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ்: “எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர்க்கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன்.
ஷெரீனுக்கு முக்கியமான ரோல், சம்யுக்தாவிற்கும் முக்கியமான ரோல்.
வனிதா இந்தப் படத்தில் இருப்பது ஆடியன்ஸுக்கு தெரியக்கூடாதென நினைத்தேன்.
வேறு வழியில்லாமல் வரவைத்து விட்டேன். அவர் கதாப்பாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும்.
அம்ரீஷ் உடன் நிறையச் சண்டைப்போட்டிருக்கிறேன். ஆனால் பொறுமையாக மிக அழகாகப் பாடல்கள் தந்துள்ளார். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார்.
சத்யாவின் திறமைக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன்.”
தயாரிப்பாளர் கே.ராஜன்: “தில் ராஜா வெல்லும் ராஜாவாக இருக்கும். விஜய் சத்யா ஒரு ஆணழகன், தமிழ்மகன் நல்ல நடிகனாக வெற்றி பெற வாழ்த்துகள். இப்போது வரும் நடிகர்களுக்கு வரும் போதே எம்.ஜி.ஆர் ஆகிவிட வேண்டுமென ஆசை. ஆனால் அவர் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது.
சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவர். அதிலிருந்து உழைத்து வந்தவர். அவர் அருமை யாருக்கும் வராது. சத்யா நன்றாக உழைத்து, இன்னும் நல்ல படங்கள் செய், நல்ல நடிகனாக என் வாழ்த்துக்கள்” என்றார்.
சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர்.