அமலா பால், ‘நீலத்தாமரா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் 2009 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் மைனா, தெய்வத் திருமகள், ரன் பேபி ரன், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர், டைரக்டர் ஏ.எல். விஜயை 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். விஜயுடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2017 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார் அமலா பால்.
அன்று தனது நண்பரான, ஜெகத் தேசாயிடம், தனது காதலை தெரிவித்து அவருக்கு மோதிரம் அணிவித்தார்.
இந்நிலையில். கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தங்கள் கல்யாணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அமலா பாலுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-பாப்பாங்குளம் பாரதி.