Take a fresh look at your lifestyle.

ஆண்களின் பிரச்சினைகளைப் பேசும் முதல் படம்!

கதாநாயகன் ரியோ ராஜ், தனது சமீபத்திய திரைப்படமான ‘ஜோ’வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதியத் திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த ‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்’ நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில், புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

பிளாக்‌ஷிப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், ‘ஜோ’ திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ – மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் கலை கட்ட தொடங்கியுள்ளது.

மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில் பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர், ஆகியோரும் களமிறங்குகிறார்கள்.

இன்று தொடங்கி இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருடப் பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் .

“திருமணமான ஆண்களின் பிரச்சினைகளைப் பெண்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும்” என சொல்லிவிட்டு தன்னம்பிக்கையோடு சிரிக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். இந்தப் படத்திற்கான மக்கள் தொடர்புப் பணிகளை சதீஷ் குமார் மேற்கொள்கிறார்.