தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, சில நாட்களில் படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
– தேஜேஷ்