‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார், இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொடுத்து விட்டு, கார் ரேஸ் பந்தயத்துக்கு வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்.
இதில் முதலாவதாக வரப்போவது ‘விடாமுயற்சி’. பொங்கல் அன்று வெளியாக இருந்த இந்தப் படம், தள்ளிவைக்கப்பட்டு வரும் 6-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜித் தவிர, அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘விடாமுயற்சி’ திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் கதையைத் தழுவி, விடாமுயற்சியின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் படத்துக்காக அஜித் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கும் அஜித், விடாமுயற்சிக்குப் பெற்ற ஊதியத்தையே பெற்றுள்ளார்.
-பாப்பாங்குளம் பாரதி.