Take a fresh look at your lifestyle.

சர்ச்சையில் சிக்கிய அஜித்!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித், இப்போது மகிழ் திருமேனி டைரக்டு செய்யும் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் முழு வீச்சில் நடந்து வருகிறது. அஜித் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கமாகி உள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு, அஜித் துபாய்க்கு சென்றார். அங்கு ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

ஓட்டல் ஊழியர்களுடன் டான்ஸ் ஆடி அவர்களை குஷிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் இப்போது வெளியான மற்றொரு வீடியோ, அஜித் ரசிகர்களுக்கும் அவரது நலம் விரும்பிகளுக்கும், ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுத்துள்ளது.

அந்த வீடியோவில், அஜித் தன்னை வீடியோ எடுத்த ரசிகரின் போனை கோபத்துடன் தட்டி பறிக்கிறார்.

பின்னர் அந்த வீடியோவை அழித்து விட்டு அதனை ரசிகரிடமே திருப்பி கொடுக்கிறார்.

அஜித்தின் இந்த செயலை அருகில் இருந்த மற்றொரு ரசிகர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.

ரசிகர்களிடம் அஜித் கோபமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல, 2021 ஆம் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வந்த அஜித்துடன் வாக்குசாவடியில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார்.

அந்த ரசிகரின், செல்போனை அஜித் பறித்தது அப்போது சர்ச்சை ஆனது.

அதுபோன்ற சம்பவம் இப்போது துபாயில் நடந்துள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.