வேல்டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம் சார்பில் (03.02.2025) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், ‘விடாமுயற்சி’ படம் குறித்த தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

திறமை, அறிவு எல்லாவற்றையும் விட விடாமுயற்சியே வெற்றி தரும் எனக் கூறி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆரவும் அஜித்குமாரும் இணைந்திருக்கும் புகைப்படமும் ஊடகத்துறை மாணவர் யோகித் வரைந்த ஆரவின் ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.