Take a fresh look at your lifestyle.

பிலிம்பேர் OTT விருதுகள் அறிவிப்பு!

பிலிம்பேர் OTT விருதுகளில், சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட்டும், சிறந்த நடிகருக்கான விருதை மனோஜ் பாஜ்பாயும் பெற்றுள்ளனர். 4-வது பிலிம்பேர் OTT விருதுகளை உத்தரப்பிரதேச அரசுடன் இணைந்து ஹூண்டாய் மோட்டார், அஜியோ மற்றும் ஃபிலிம் பந்து, ஃபுரா ஜெம்ஸ் மற்றும் ஐடிசி ஃபியாமா ஆகியவை இணைந்து வழங்கின.

இதில் நெட்ஃபிக்ஸ்சில் வெளியான வெப் ஒரிஜினல் திரைப்படமான டார்லிங்ஸ்ல் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது ஆலியா பட்டுக்கும், சர்ஃப் ஏக் பண்டா காஃபி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது மனோஜ் பாஜ்பாய்க்கும் வழங்கப்பட்டது.

– தேஜேஷ்