தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் வட இந்தியக் கொள்ளையர்களைத் தமிழக போலீசார் தேடிக் கண்டறிகிற கதையை அத்தனைப் புள்ளி விவரங்கள், நுணுக்கங்களுடன் சொன்னப்பிறகும் கண்ணூர் ஸ்குவாட் இதைத் தாண்டி என்ன சொல்லிவிட போகிறது என்ற எண்ணத்தில் பார்க்கத் துவங்கினேன்.
ஒரே கதையை வெவ்வேறு கதை மாந்தர்கள் அணுகும் விதத்தில் கதை எளிதாகப் புதியர் பரிமாணம் அடைகிறது என்பதைக் கண்டுணர முடிகிறது.
மம்மூட்டி என்ற ஆகிருதி கதாநாயகன் எத்தனை சிறிய கதாபாத்திரத்தையும் எத்தனைப் பெரிய கதாபாத்திரத்தையும் எப்படி எளிமையாக effortless ஆக கையாளுகிறார் என்று புரியவில்லை.

60 வயதில் தான் ஆனை முழுபலத்துடன் போர் புரியுமாம். வயசான சிங்கமல்ல இது ஆ..ஆனை வேட்டைக்குச் செல்கிறது.
காடு மலை மேடு சாலை நகரங்கள் புழுதி நெருப்பு இருட்டு கூட்டத்திமிழ் என்று திரிந்தலைகிறது. வேட்டையில் வெற்றிக் கொள்கிறது.
இயல்பான ஹீரோயிசத்திற்கும் கமர்சியல் ஹீரோயிசத்திற்கும் நடுவே சண்டைக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது நம்பகத் தன்மை குலையாமல் பார்த்துக் கொள்கிறது.
பார்த்து பழகிய கதையை, சம்பவங்களை, கேமராவும், படப்பிடிப்புத் தளங்களும் படமாக்கலும், அத்தனை புத்துயிர்ப்பாக மாற்றிவிடுகிறது.
இயக்குநர் சின்ன சின்ன ஷாட்டைக் கூடப் பார்த்து பார்த்து புதிய பிம்பமாக உருவாக்கியிருக்கிறார்.
நன்றி: இயக்குநர் வசந்தபாலன் முகநூல் பதிவு