Take a fresh look at your lifestyle.

இருக்கிறதிலேயே காமெடிதான் கஷ்டம்!

நடிகை நிரோஷா

1988-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிரோஷா.

தொடர்ந்து கமலஹாசனுடன் ‘சூரசம்ஹாரம்’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

1988-ல் தொடங்கிய இவரது திரை வாழ்க்கை 1995 வரையில் புகழோடு இருந்தது. 1995-இல் நடிகர் ராம்கியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் 3 ஆண்டுகள் நடிக்காமலிருந்த நிரோஷா மீண்டும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் துவங்கினார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘தாமரை’ போன்ற தொடர்களில் மிகப் பிரபலமானார். தற்போதும் இவர் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

திரையில் காமெடி ரோலில் தான் நடித்த அனுபவம் குறித்து இதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து…

“காமெடி ரோலில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?”

“பிரியமான தோழி’ படம்தான் என் காமெடி டிராக்குக்கு அடித்தளம். அந்த நேரத்தில், ‘நாயகியா நடிச்சுட்டு, காமெடி போர்ஷன் பண்றீங்களே’னு பலரும் சொன்னாங்க.

‘எந்த கேரக்டரா இருந்தா என்ன? எல்லாம் நடிப்புதானே. இது ஒரு ஜானர். இருக்கிறதிலேயே காமெடிதான் கஷ்டம். அதனால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை’னு சொல்வேன்.

அந்தப் படத்தில் லிவிங்ஸ்டன் சாருக்கு ஜோடி. என்னாலும் காமெடியைச் சிறப்பா பண்ணமுடியும் என்கிற நம்பிக்கை கிடைச்சது. பிறகுதான், ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ காமெடி சீரியலிலும் நடிச்சேன்.” 

– நன்றி: ஆனந்த விகடன்