Take a fresh look at your lifestyle.

‘ரிவால்வர் ரீட்டா’ ஒரு ‘டார்க் காமெடி’ படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் நாளை மறுநாள் (நவம்பர்-28) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்பட வெளியீட்டையொட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்:

“இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபுமுதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி.

ஷான் நல்ல இசை தந்துள்ளார், அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கலை இயக்குநர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி.

ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன். அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன்.

அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். என் உடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர்.

கதிர் சார், செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம், எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.” என்றார்.

சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம்” திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன்,

சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.