Take a fresh look at your lifestyle.

மோகன்லாலுக்கு இணையான நடிகர் பாண்டியராஜன்!

பாண்டியராஜன் படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. கதாநாயகன் படமும் அப்படித்தான். இந்தப் படம் முக்தா சீனிவாசன் அவர்கள் இயக்கிய படமாகும்.
 
இப்படம் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வந்த ‘நாடோடிக் காத்து’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
 
மலையாளத்தில் மோகன்லால் செய்த வேடத்தை தமிழுக்கு பாண்டியராஜனுக்குக் கொடுக்க தைரியம் வேண்டும். பாண்டியராஜனிடம் நகைச்சுவைக்கு பஞ்சமா இருக்கப் போகிறது?
 
அவர், பாடி லாங்வேஜ், பேச்சு என எல்லாவற்றிலும் கலக்கி விடுவார். இப்படத்திலும் கலக்கி இருந்தார்.
 
மலையாளத்தில் காமெடி டயலாக் மற்றும் நடிப்பு என்றால் சீனிவாசன் தான் ஒரு காலத்தில் டாப்ல இருந்தார். அவர் மலையாளத்தில் நடித்த வேடத்திற்கு தமிழில் எஸ்.வி.சேகர் நடித்திருந்தார்.
 
பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவருமே நகைச்சுவை மற்றும் கவுண்ட்டர் அடிப்பதில் சளைத்தவர்கள் அல்ல. இருவரின் கலகல நடிப்பால் படம் நன்றாக இருந்தது.
 
நான் மணி, இவன் ரமணி. நான் பி.காம் பர்ஸ்ட் க்ளாஸு இவன் எஸ்.எஸ்.எல்.சி என அடிக்கடி படிப்பை குத்திக் காட்டி, தன்னை முன்னிலைப்படுத்தி காண்பிப்பது மாதிரியான கதாபாத்திரம்.
 
மலையாளத்தில் சீனிவாசன் திரைக்கதை எழுதும் படங்களுக்கு தமிழுக்கு ஏற்ற எழுத்தர் கிரேஸி மோகன் தான் வசனம் எழுதி இருந்தார்.
 
சித்திக் மற்றும் லால் தான் மலையாளத்தில் கதை எழுதி இருந்தனர். சித்திக் ‘ப்ரண்ட்ஸ்’ மாதிரி படத்தை இயக்கி இயக்கியவர். இதுபோல நகைச்சுவைக் கதையை இயக்குவதில் சித்திக் – லால் இருவரும் வல்லவர்கள்.
 
கிரேஸி மோகன் அப்போ அவர் கமல் படத்துக்கெல்லாம் அதிகம் எழுதி சினிமா உச்சம் தொடாத காலம்.
 
இந்த கோனார் தமிழ் உரைங்கிறாங்களே அது நீங்க எழுதினதா இதுபோல டயலாக் தான் கிரேஸி மோகனின் ஸ்பெஷல். இதுபோல வசனத்தை பாண்டியராஜனும், எஸ்.வி.சேகரும் பேசுவார்கள்.
 
படம் முழுக்க சின்ன துணுக்குகள் காமெடியோடு படம் நகரும், சரியான வேலை இல்லாத காரணத்தால் வெளிநாடு போறேன்னு சொல்லி கஜாக்கா தோஸ்த் ஆக வரும் பசி நாராயணனிடம் சொல்லி வெளிநாடு போக அவர் கள்ளத்தோணில துபாய் கூட்டி போறதா சொல்லி கொச்சின்ல இறக்கி விட்டு விடுவார்.
 
அவர்கள் சி.ஐ.டி என நம்பி அங்கே கடத்தல் வேலை செய்யும் மலேசியா வாசுதேவன் குரூப் அவர்களைப் பார்த்து பயப்பட அடுத்தடுத்து வரும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
 
நடுவில் டெரர் ஆக வரும் பிரதீப் சக்தியின் மயில்ராவணன் கதாபாத்திரம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். இறுதியில் அந்தக் கதாபாத்திரமும் புஸ் என்று நகைச்சுவை போல போய்விடும்.
 
பாண்டியராஜன், எஸ்.வி.சேகர், ரேகா, ரம்யா கிருஷ்ணன், டெல்லி கணேஷ், மலேசியா வாசுதேவன் என பலர் நடித்திருந்தனர் நல்லதொரு அருமையான திரைப்படமாக வந்தது ‘கதாநாயகன்’.
 
சந்திரபோஸ் இசையில் “பூ பூத்ததை” பாடல் நன்றாக இருந்தது. நகைச்சுவை – டாப் க்ளாஸ் என சொல்லலாம். 
 
முக்தா சீனிவாசன் இயக்க அவரின் மகன் முக்தா சுந்தர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1988ம் ஆண்டு வந்த திரைப்படம் இது. படம் வந்து 37 ஆண்டுகள் ஆகின்றன.
 
– நன்றி: முகநூல் பதிவு