Take a fresh look at your lifestyle.

‘லவ்வர்’ வெற்றிக்கு வித்திட்ட இசைக் கூட்டணி!

இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், மணிகண்டன் – ஸ்ரீ கௌரி ப்ரியா நடிப்பில் கடந்தாண்டு காதலர் தினத்தையொட்டி வெளியான படம் ‘லவ்வர்’. இவர்களுடன் கண்ணா ரவி, கீதா கைலாசம், ஹரீஷ் குமார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

காதலர்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களையும், நுணுக்கமான உணர்வுகளையும் பேசிய இந்தப் படம் பரவலான விமர்சனங்களைப் பெற்றதோடு வசூல் ரீதியாக சுமாரான வெற்றியையும் பெற்றது.

ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் கவிஞர் மோகன் ராஜனின் பாடல் வரிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘லவ்வர்’ படத்தின் வெற்றிக்கு பாடலும் இசையும் காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் கடந்தாண்டு திரைக்கு வந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களுக்கு விகடன் குழுமம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில், லவ்வர் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா, பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.