Take a fresh look at your lifestyle.

அட்லீ படத்தில் இணைந்த தீபிகா படுகோன்!

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார்.

வரலாற்றுப் பின்புலத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.  ‘அவதார்’ திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர்.

அல்லு அர்ஜுன் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப் படத்திற்கு சாய் அப்யங்கர்  இசையமைக்க உள்ளார்.

 

இந்த நிலையில், இந்தப் படத்தில் தீபிகா படுகோன் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது. இதில், வேற்று கிரகவாசி கதாப்பாத்திரத்தில் தீபிகா நடிப்பதாகவும், அவருக்கு ஆக்ஷன் கதாப்பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது.