‘சின்ன வீடு’ திரைப்படத்திற்கு ஒரு தனித்த பெருமை உண்டு. இந்தத் திரைப்படத்தில்தான் தமிழில் முதன் முதலில் பெண் ஒளிப்பதிவாளர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
பொதுவாக ஒளிப்பதிவாளர் பணி என்பது சிரமமானதாகவும் ஆண்களால் மட்டுமே செய்யக்கூடிய பளுவைக் கொண்டதாகவும் கருதப்பட்டது.
ஆனால், இந்த நடைமுறை கற்பனையை உடைத்தெறிந்து B.R.விஜயலஷ்மி ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டார்.
பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பி.ஆர். பந்துலுவின் மகளான விஜயலஷ்மி, பிறகு பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தததோடு திரைப்படங்களையும் இயக்கினார்.
பெண் ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியதின் மூலம் பெண் குலத்தின் பெருமையை பதிவு செய்த பாக்யராஜ் பாராட்டுக்குரியவர்.
நன்றி: சினிமா விகடன்