உலகம் சுற்றும் வாலிபனில் கதாநாயகி ஆனது எப்படி என்பது பற்றி தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை லதா.

அப்போது நெகிழ்வோடு பேசிய அவர், ”உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர். புது கதாநாயகியைத் தேடிக் கொண்டிருந்தபோது, பள்ளியில் நடன நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட எனது புகைப்படத்தைப் பார்த்து, அதுபற்றி நடிகர் மனோகரிடம் விசாரித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மனோகர் வந்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன்பேரில் நானும், எனது தாயாரும் அவருடன் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தோம்.
எம்.ஜி.ஆர். எனது தாயாரை சமாதானம் செய்து, படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார்.
எனக்கு நடிப்பு, நடனம், தமிழ் உச்சரிப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து, களிமண் மாதிரி இருந்த என்னை சிலையாக வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.
அத்துடன் நளினி என்ற எனது பெயரை சினிமாவுக்காக லதா என்றும் மாற்றினார்.
உலகம் சுற்றும் வாலிபன் படம் மறக்க முடியாத அனுபவம். முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் நடித்ததால் மிக விரைவில் புகழின் உச்சியை எட்டினேன்” எனக் கூறினார்.
நன்றி: தினந்தந்தி