பாலிவுட்டின் முன்னணி நடிகர் நானா படேகர். தமிழில் ரஜினியுடன் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார். பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தில் இயக்குநர் வேடத்தில் நடித்தார்.
அதில் தனது அநாயாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் அதிகமான படங்களில் நடிப்பதில்லை. கதையும், அதில் தனது கேரக்டரும் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பது இவரது வழக்கம்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதில் மகேஷ்பாபுவின் அப்பா வேடத்தில் நானா படேகரை நடிக்க வைக்க ராஜமவுலி விரும்பினார்.
இதற்காக புனேயிலுள்ள நானா படேகரின் பண்ணை வீட்டுக்குச் சென்று அவரிடம் ராஜமவுலி கதையை சொன்னார்.
கதையை கேட்ட நானா படேகர், தனது கேரக்டர் வலுவானதாக இல்லை என்பதால் நடிக்க முடியாது என ராஜமவுலியிடம் கை விரித்து விட்டார்.
நானா படேகர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தனது படத்துக்கு ரூ.20 கோடி வரை சம்பளமாக தருவதாக ராஜமவுலி ஆசை காட்டியும் நானா படேகர், அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.