Take a fresh look at your lifestyle.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் தபு!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தபு. தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் தபு நடித்துள்ளார்.

இந்தி நடிகையான தபு தமிழ், தெலுங்கு, மலையாளம், அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் கடைசியாக நடித்த படம் சினேகிதியே. அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் தபு.

இயக்குநர் பூரி ஜெகநாத் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இருவரும் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தபு இணைந்துள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.