Take a fresh look at your lifestyle.

டி.எம்.எஸ் – மகா இசைக்கலைஞன்!

எழுத்தாளர் ஷாஜி

தமிழுக்கென்றே பிறந்து தமிழாகவே வாழ்ந்த மகா கலைஞனின், இசைத் தாயின் நிரந்தரக் குழந்தை டி.எம்.சௌந்தரராஜனின் பிறந்த தினம் (24-மார்ச்).
 
எனது வாழ்நாளில் ஐயன் டி.எம்.சௌந்தரராஜன் போன்ற ஒரு பின்னணிப் பாடகனை நான் கேட்டதில்லை, பார்த்ததில்லை. ஒவ்வொரு பாடலின் உணர்வையும் தனதாக்கி, உண்மையின் உச்சமாகப் பாடிய ஈடு இணையற்ற பாடகர் எங்கள் டி எம் எஸ்.
 
குழந்தை மனம் படைத்தவர். அந்தத் தூய்மை ஒவ்வொரு பாட்டிலும் வெளிப்பட்டது. அவரை சந்தித்துப் பேசிப் பழகி, அவரோடு சேர்ந்து பயணம் செய்ததெல்லாம் இப்போது ஒரு கனவாகவே எனக்குத் தோன்றுகிறது.
 
அவரது பல பாடல்களைக் கேட்கும்போது இன்றளவும் எனது கண்கள் ஈரமாகின்றன. மானுடம் இருக்கும் வரையில் டி.எம்.எஸ் பாட்டிக்கொண்டேயிருப்பார்.
*
நன்றி: நண்பரும், எழுத்தாளருமான ஷாஜியின் முகநூல் பதிவு