கடந்த 2023-ம் ஆண்டு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘லியோ’. வசூலிலும் ரசிகர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 171-வது படத்தை உருவாக்குகிறார். இதற்கு ‘கூலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
சிறப்புப் பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தப் படப்பிடிப்பில் ரஜினி நடிக்கும் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்ட நிலையில், ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளையொட்டி (மார்ச்-14) கூலி படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோ வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், படப்பிடிப்பில் முக்கிய நடிகர்களுடன் லோகேஷ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் மட்டுமின்றி இன்று ‘கூலி’ படத்தின் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கும் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவருடைய இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.