Take a fresh look at your lifestyle.

ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடிய ‘பில்லா’ படக்குழு!

பேசும் படம்:

இந்தித் திரைப்படத்தைத் தழுவி, ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் ‘பில்லா’.   

1980-ம் ஆண்டு உருவான இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம், கொள்ளைக் கூட்டத்துத் தலைவனாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ரஜினியின் சினிமா வாழ்க்கையில், மிகப்பெரிய படங்களில் ஒன்றாக இடம்பெற்றிருந்த இத்திரைப்படம் திரையரங்குகளில் 200 நாட்கள் மேல் ஓடி வெற்றி பெற்றது. 

இதில்  ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், பிரவீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

‘பில்லா’ படப்பிடிப்பில் ரஜினியின் பிறந்தநாளுக்குக் கேக் வெட்டிக் கொண்டாடும்போது, எடுத்த புகைப்படம் இவை. இதில் ரஜினியுடன் கே. பாலாஜி மற்றும் படக்குழுவினரும் இடம்பெற்றுள்ளனர்.

புகைப்படம் உதவி: ஞானம்.