Take a fresh look at your lifestyle.

புன்னகைக்குப் பின்னால் இருக்கும் சோகத்தை உணர்த்திய படம்!

பேசும் படம்:

கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1986-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘புன்னகை மன்னன்’.

இதில் ரேவதி, ஸ்ரீவித்யா, ரேகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் தீபாவளி அன்று வெளியானதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் திரையிடப்பட்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்தில் சுரேஷ் கிருஷ்ணா இணை இயக்குநராக பணியாற்றினார்.

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்தியில் ‘சாச்சா சார்லி’ என்ற பெயரில் வெளியானது.

‘புன்னகை மன்னன்’ படப்படிப்பின் போது பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதில் கமல், ரேவதி மற்றும் இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புகைப்படம் உதவி: ஞானம்.