Take a fresh look at your lifestyle.

தியேட்டர்களில் இருந்து வெளியேறிய ‘விடாமுயற்சி’!

‘துணிவு’ படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள அஜித் திரைப்படம் ‘விடாமுயற்சி’. ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜித் தவிர  அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பாளராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணி புரிந்தனர்.

‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி உருவான படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரபேற்பைப் பெறவில்லை. ஊடகங்களில் வெளியான விமர்சனங்களும், சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

அஜித் படத்துக்கு எப்போதுமே நல்ல ‘ஓபனிங்’ உண்டு. விடாமுயற்சிக்கு ‘ஓபனிங்’ கிடைக்கவில்லை. வசூலும் ரொம்பவும் சுமார் தான். கடந்த 6 ஆம் தேதி வெளியான இந்தப் படம், முதல் நாளில் இந்திய அளவில் ரூ.26 கோடியை வசூலித்தது.

அதன் பிறகு வசூல் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வந்தது.

அதன் முழு விவரம்:

முதல் நாள் : ரூ. 25. 50 கோடி
2 ஆம் நாள் : ரூ. 10 கோடி
3 ஆம் நாள் : ரூ. 13 கோடி
4 ஆம் நாள் : ரூ. 12.50 கோடி
5 ஆம் நாள் : ரூ. 3.50 கோடி
6 ஆம் நாள் : ரூ. 3. 75 கோடி
7 ஆம் நாள் : ரூ. 2.50 கோடி

8 ஆம் நாளான நேற்று (வியாழக்கிழமை) வெறும் 2. 25 கோடி வசூல் ஆனது.

தமிழ்நாட்டில் நேற்று வரைக்கும் விடாமுயற்சி ரூ.73 கோடி வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்கள் ஓடினால், ரூ.100 கோடியை எட்டலாம்.

உலக அளவில் அதிக பட்சம் 150 கோடி ரூபாய் வசூல் செய்யும்.

தூக்கப்பட்ட விடாமுயற்சி:

காதலர் தினமான இன்று, தமிழில், என்றும் இல்லாதபடி ஏகப்பட்ட சினிமாக்கள் வெளியாகியுள்ளன.

‘பேபி & பேபி’, ‘2K லவ் ஸ்டோரி’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ‘அது வாங்கினா இது இலவசம்’, ‘தினசரி’, ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘ஃபையர்’ போன்ற படங்கள் இதில் அடக்கம்.

கடந்த வாரம் விடாமுயற்சி ரீலீஸ் ஆன தியேட்டர்களில் இந்தப் படங்கள் வெளியாகியுள்ளன.

வசூல் குறைந்ததால், பெரும்பாலான B சென்டர் தியேட்டர்களில் இருந்து அஜித் படம், வெளியேறிவிட்டது. புதிய படங்களுக்கு வழி விட்டு ‘அல்டிமேட் ஸ்டார்’ ஒதுங்கிக் கொண்டார்.
அஜித்துக்கு ‘பேட் டைம்’.

‘குட் பேட் அக்லி’ யை எதிர்பார்த்து, ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.