‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், சினிமாவுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளார். அவர், கடைசியாக நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். விஜய்க்கு இது 69-வது படம். ‘தளபதி 69’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்ட, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், நரேன், கவுதம் மேனன், பிரியாமணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது. தனது கட்சியின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய விஜய், தீபாவளியை முன்னிட்டு ஓய்வு எடுத்து விட்டு, நேற்றைய சூட்டிங்கில் கலந்து கொண்டார்.
தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதால், படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுகிறது.
இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில், வசனக் காட்சிகள் அனைத்தையும் படமாக்க முடிவு செய்துள்ளார் டைரக்டர் வினோத். அடுத்த ஆண்டு (2025) அக்டோபரில் படத்தை வெளியிட திட்டம்.
ஏற்கனவே பிரமாண்டமாக ஒரு பாடலைப் படமாக்கியுள்ளனர். எஞ்சிய பாடல்கள் மற்றும் சண்டக் காட்சிகள் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளது. அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ அனல் அரசு.
– பாப்பாங்குளம் பாரதி.