Take a fresh look at your lifestyle.

நிமிஷா சஜயனின் புதிய படம் ‘என்ன விலை’!

கடந்த 2017-ம் ஆண்டு திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’.

இந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியரான சஜீவ் பழூர் தேசிய விருது பெற்றவர். இந்நிலையில் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘என்ன விலை’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், கருணாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், விஜயலட்சுமி, ஷாஷா, பிரவீனா, கமலேஷ், கோலி சோடா பாண்டி, சேத்தன் குமார், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.