Take a fresh look at your lifestyle.

இந்தி தேவை என்றால் கற்கலாம்; ஆனால் திணிக்கக் கூடாது!

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் சுதந்திரம் தினத்தன்று திரைக்கு வர உள்ளது.

தமிழில் விஜய், சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக ‘பேபி ஜான்’ உருவாகிறது. ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியிலும் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகி உள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் அளித்துள்ள நேர்காணலில்  ரகுதாத்தா இந்தி மொழிக்கு எதிரான படம் என்று கூறப்படுகிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்க பதிலளித்த கீர்த்தி சுரேஷ் “ரகுதாத்தா இந்தித் திணிப்புக்கு எதிரான படம். நான் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்புக் கூடாது என்பதுதான் எனது கருத்து” என்றார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில் அவருடன் நட்பாக இருக்கும் நீங்கள் அந்தக் கட்சியில் சேருவீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்றார்.

இந்தியில் நடிக்கும் பேபி ஜான் படம் குறித்து மேலும் பேசிய கீர்த்தி சுரேஷ், “பொதுவாக ரீமேக் படங்களில் நடிக்க எனக்கு பயம்.

ஆனால் பேபி ஜான் படத்தில் நடிக்க பயப்படவில்லை. காரணம் நாயகி கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக வடிவமைத்து இருந்தார்கள்” என்றார்.