அதிகமான வேலைப் பளுவில் சில திரைப்படங்கள் பார்த்தால் மனதிற்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும். அப்படி அடிக்கடிப் பார்க்கும் படங்களின் லிஸ்ட் ரொம்பவே அதிகம்.
என்னவோ இன்னைக்கு தில்லானா மோகனாம்பாள் பார்க்கவேண்டும் போல இருந்தது. கேபி சாரின் படங்கள் வரிசையும் உண்டு.
மானிட்டரின் வலது பக்கத்தில் ஓப்பன் செய்து வைத்திருக்கும் பல திரைகளின் நடுவில் சிவாஜி கணேசன் வாசித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் கேட்டபடி அவ்வப்போது பார்வையை அத்திரைப்பக்கம் செலுத்தியபடி. ஆச்சியின் டயலாக் டெலிவரியும், குரலும் உடல்மொழியும் அள்ளும்.
சிக்கலாரின் சட்டென்ற கோபம் ஆதங்கமும், காதலை மனதிற்குள் புதைத்து வைப்பதும், தன்மானத்திற்கென வெகுண்டெழுவதும், அதிலும் அந்த நர்ஸ் பெண்ணின் அன்பை தவறாக புரிந்து கொண்டு அந்தப்பெண்ணின் வார்த்தைகளுக்குப் பின், சட்டென மனம்மாறி தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், நீ எனக்கானவள் என்பதை மோகனாவிடம் பொறாமையுடனும், அதீத காதலுடனும், கோபத்துடனும் அதை வெளிப்படுத்துவதும் அட்டகாசம்.
மோகனாவின் காதல், காதலன் புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கம்.
நாட்டியமும், தன்னை இழக்காமல் நிமிர்வுடன் நடப்பதும், சிக்கலார் மலேயா போவதைத் தடுக்க அவரைச் சீண்டிவிடுவதும்.
நாட்டியம், அழகு, பாவனை.. பத்மினியம்மா க்ளாஸ். பாலைய்யா அவர்களின் காமெடி அந்த டிரைன் சீன், நாகேஷ் அவர்களின் நக்கல் கலந்த நடிப்பும். எத்தனை அருமையான நடிகர்கள், வாழ்ந்திருக்கிறார்கள்.
சென்ற புத்தகக் கண்காட்சியில், கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய நாவலின் புது பதிப்பான மூன்று தொகுதிகளை வாங்கி வந்தேன் இன்னும் வாசிக்கவில்லை.
நன்றி: முகநூல் குறிப்பு