Take a fresh look at your lifestyle.

மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அனிருத்!

அனிருத் ரவிச்சந்தர் கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட் அடியெடுத்து வைத்தார். படத்தின் ஒலிப்பதிவு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மீண்டும் ஷாருக்கானுடன் இணைவதன் மூலம் இந்தித் திரையுலகத்தை மீண்டும் வியக்க வைக்க உள்ளார் அனிருத்.

சுஜோய் கோஷ் இயக்கவுள்ள ஷாருக்கானின் அடுத்த படமான ‘கிங்’ படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத்தின் இசையில் ஈர்க்கப்பட்ட ஷாருக்கான் அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாகவும் கூறப்படுகிறது. டான் வேடத்தில் நடிக்கும் ‘கிங்’ ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கப் போகிறது.

ஷாருக்கின் மகள் சுஹானா கான் இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ‘கிங்’ படம் செப்டம்பரில் தொடங்க உள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

– தேஜேஷ்