Take a fresh look at your lifestyle.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் ஜோதிகாவின் படம் உள்பட என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்ப்போம்.

ஜோதிகா நடித்த பாலிவுட் திரைப்படமான `சைத்தான்’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியது.

அதேபோல் இந்த வாரம் ‘கார்டியன்’ என்ற ஒரே ஒரு தமிழ் திரைப்படம் மட்டுமே சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் வெளியாகியது.

ஹன்சிகா மற்றும் சுரேஷ் மேனன் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படத்தை சபரி இயக்கி இருந்தார். கடந்த மார்ச் மாதம் இந்தப் படம் வெளியானது.

இதையடுத்து மற்ற மொழி திரைப்படங்களான ‘சித்தார்த்ராய்’ மற்றும் ‘ஹேப்பி எண்டிங்’ என்ற தெலுங்குப் படங்கள் ஆஹா ஓடிடியிலும், சைனா பிளே ஓடிடியில் ‘போகா’ என்ற மலையாள படமும் வெளியாகியது.

மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘அகெல்லி’ என்ற இந்திப் படமும், மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த ‘ஹீராமாண்டி’ என்ற இந்திப் படமும் வெளியாகியது.

– தேஜேஷ்