Take a fresh look at your lifestyle.

நீதிக்கான போராட்டத்தை எதிரொலிக்கும் படம்!

பவன் கல்யாண் நடிக்கும், ஏ.எம்.ரத்தினத்தால் இயக்கும் மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘ஹரி ஹர வீர மல்லு’ பிரம்மாண்டமான திரைப்படத்தின் டீசர் வெளியாகியது.

17 ஆம் நூற்றாண்டின் வீரத்தின் வாழ்க்கையை இணையற்ற அர்ப்பணிப்புடன் தயாரிப்புக் குழு, சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற வரலாற்றுச் சின்னங்களை மீண்டும் உருவாக்க சர்வதேச தரமான மதிப்புகளுடன் இணைந்துக் காட்சியை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிப்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தீவிர எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான டீசரை வெளியிட்டுள்ளார்.

படத்தின் பிரிவை இரண்டு பகுதிகளாக வெளிப்படுத்தினர். முதலில் ‘ஹரி ஹர வீர மல்லு’ பகுதி-1 என பெயரிடப்பட்டது. இது நீதிக்கான போராட்டத்தை எதிரொலிக்கிறது.

இந்த டீசரில், அநீதி மற்றும் சமத்துவமின்மையால் பீடிக்கப்பட்ட உலகில் நீதிக்கான தேடலைத் தொடங்கும் பவன் கல்யாண் “ஒரு தனி வீரராக” வெளிப்படுகிறார். ஆஸ்கார் விருது பெற்ற மேஸ்ட்ரோ எம்.எம். கீரவாணி அற்புதமான இசையமைத்துள்ளார்.

ஒரு வலிமையான முகலாய பேரரசராக சித்தரிக்கப்பட்ட பாபி தியோல், மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் காரணத்திற்காக போராடும் ஒரு ஹீரோவின் உணர்வை வெளிப்படுத்தும் பவன் கல்யாண் ஆகியோரின் சேர்க்கைப் படத்தை வலுப்படுத்துகிறது.

கிரிஷ் ஜாகர்லமுடியின் புத்திசாலித்தனமான வழிகாட்டுதலின் கீழ் எழுத்தாளர்-இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவிடம் மீதமுள்ள படப்பிடிப்பையும், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் முடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த காவியப் பயணத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நிதி அகர்வால், பாபி தியோல், சுனில், நோரா ஃபதேஹி மற்றும் பல நடிகர்கள் உள்ளனர்.

ஞானசேகர் வி.எஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சாவின் தலைசிறந்த ஒளிப்பதிவில், ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் மாஸ்டர் பீஸாக இருக்கிறது.

இந்த ஆண்டு படத்தின் வேலைகள் முடிவடையும் நிலையில் ஹரி ஹர வீர மல்லுவை திரையில் காண்பதற்காக பவன் கல்யாண் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

– தேஜேஷ்