தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை தி.நகரில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.
இந்தப் பணிகள் முழுமை பெற 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கட்டிடம் கட்டுவதற்கு நடிகர், நடிகைகள் பணம் வழங்கி வருகின்றனர்.
அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் ரூ.1 கோடியும், நடிகர் விஜய் ரூ.1 கோடியும் நிதியுதவி அளித்தனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சங்கப் புதிய கட்டிடப் பணிகளைத் தொடர்வதற்காக 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
இதற்கான காசோலையைத் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் அவர் வழங்கினார்.
-பாப்பாங்குளம் பாரதி.