Take a fresh look at your lifestyle.

அடுத்த ஆண்டில் வெளியாகும் ராம் சரணின் RC17!

குளோபல் ஸ்டார் ராம் சரண் 2024 ஆம் ஆண்டிற்கு பல்வேறு புதிய திட்டங்களுடன் தயாராகிவிட்டார்.

சமீபத்தில், அவர் தனது புதிய படமான RC 16-ன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தனது வரவிருக்கும் திரைப்படங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். ராம் தனது ‘ரங்கஸ்தலம்’ இயக்குனர் சுகுமாருடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

ராம் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்ட தகவலில், RC17 தி ஃபோர்ஸ் ரீயூனிட்ஸ் என்று இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார்.

முதல் புகைப்படத்தில் ஹோலி கொண்டாடிய சுகுமாரை அவர் கட்டித் தழுவினார். இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இடம்பெற்றுள்ளது.

ராம், சுகுமார் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் ஆகிய மூவரும் ‘ரங்கஸ்தலம்’ திரைப்படத்தில் ஒரு வெற்றிகரமான கூட்டணியாக உள்ளனர்.

மேலும் தற்போது RC17 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள அவர்களது அடுத்த முயற்சிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆதரவளித்துள்ளது.

RC17 ஆனது 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. இது ராம் சரணின் 17வது படமாகும்.

– தேஜேஷ்