ஜிவி பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஏப்ரல் 4ஆம் தேதி அவர் நடித்த ‘கள்வன்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்திற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஜிவி பிரகாஷ் நடித்த ‘டியர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஏப்ரல் 11ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 மற்றும் 11 என அடுத்தடுத்து இரண்டு வாரங்களில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.
ஜிவி பிரகாஷ், அர்ஜுன் என்ற கேரக்டரிலும் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபிகா என்ற கேரக்டரிலும் நடித்திருக்கும் ‘டியர்’ படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.
ஜி. பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படம் ஒரு ரொமான்ஸ் படம் என்றும் இந்தப் படம் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
– தேஜேஷ்