இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் ‘கேம் சேஞ்சர்’ ஆகியப் படங்களை இயக்கி வரும் நிலையில், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் மூன்று வில்லன்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராம் சரண், தேஜா மற்றும் க்யாரா அத்வானி ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தில் மூன்று வில்லன்கள் நடித்திருப்பதாக தெரிகிறது.
அவர்களில் முக்கிய வில்லன் எஸ்ஏ சூர்யா. இதனை அடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்துள்ளனர்.
மேலும் சமுத்திரக்கனி, நாசர், வைபவ் ரெட்டி, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
– தேஜேஷ்