Take a fresh look at your lifestyle.

தாமதமாகும் சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் `புறநானூறு’ என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான `சூரரைப் போற்று’ திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் படம் தான் `புறநானூறு’.

இந்தப் படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சூர்யா `புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்புக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தப் படத்தை உங்களுக்கு சிறந்ததாக வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து `புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும். இதனால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

– தேஜேஷ்